பொதுமக்களை விரட்டும் நாய்கள்

Update: 2026-01-18 10:22 GMT

திருப்பூர் -தாராபுரம் ரோட்டில் இருந்து கே.செட்டிப்பாயைம் வழியாக வீரபாண்டிக்கு செல்லும் சாலையில் 60-க்கும் மேற்பட்ட நாய்கள் கூட்டம், கூட்டமாக சுற்றிததிரிகின்றன. இந்த நாய்கள், ஒன்றுடன் ஒன்று சண்டையிட்டபடி பொதுமக்களை விரட்டுகிறது. குறிப்பாக பெண்கள் மற்றும் குழந்தைகளை கடிக்கும் வகையில் அச்சுறுத்துகிறது. இதேபோல் இரவு நேரங்களில் இருசக்கர வாகன ஓட்டிகளை நாய்கள் விரட்டுகிறது. இதனால் அவர்கள் நிலைதடுமாறி கீழே விழுந்து படுகாயம் அடைகிறார்கள். எனவே பேராபத்துகள் ஏற்படும் முன், அச்சுறுத்தும் தெருநாய்களை பிடித்து அப்புறப்படுத்த மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சண்முகவேல், திருப்பூர்.

மேலும் செய்திகள்