பல்லடம் -மங்கலம் சாலையில் விரிவாக்கம் பணி நடந்தது. இதில் சாலையின் ஓரமாக இருந்த மின் கம்பங்களை இடம் மாற்றம் செய்யவில்லை. மேலும் இரவு நேரங்களில் வாகன ஓட்டிகள் செல்லும் போது மின் கம்பம் இருப்பது தெரியாமல் அதன் மீது மோதி விபத்துகள் ஏற்பட வாய்ப்பும் உள்ளது. எனவே மின் கம்பங்களை உடனடியாக அகற்றி, மாற்றியமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள், மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.