குளத்தையொட்டி தடுப்புச்சுவர் கட்டப்படுமா?

Update: 2026-02-22 18:20 GMT

வேலூர் விருப்பாட்சிபுரம் பகுதியில் கெங்கையம்மன் கோவிலுக்கு சொந்தமான குளம் உள்ளது. அந்தக் குளத்தைச் சுற்றி தடுப்புச்சுவர் இல்லை. அந்தக் குளத்தையொட்டி சாலை உள்ளது. அந்தச் சாலையோரம் இருசக்கர வாகனங்களில் செல்வோர் கட்டுப்பாட்டை இழந்தால் குளத்தில் தான் விழ வேண்டும். அந்தக் குளத்தையொட்டி சாலையோரம் தடுப்புச்சுவர் கட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

-மதன், வேலூர். 

மேலும் செய்திகள்