திமிரி பேரூராட்சி பஸ் நிலையத்தில் இருந்து தினமும் ஏராளமான பயணிகள் ஆரணி, வேலூர், ஆற்காடு, திருவண்ணாமலை ஆகிய ஊர்களுக்கு சென்று வருகின்றனர். இது தவிர திமிரி பஜாரில் தனியார் திருமண மண்டபம் அருகே பஸ் நிறுத்தம் உள்ளது. அங்கு பஸ்சுக்காக காத்திருக்கும் பயணிகளுக்கு நிழற்கூடம் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-சுப்பிரமணியம், திமிரி.