திருச்சி கருமண்டபம், சக்திநகர், அருணா அவென்யூ பகுதிகளில் ஏராளமான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் இப்பகுதியில் கொசுத்தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் இப்பகுதி பொதுமக்கள் இரவில் தூங்க முடியாமல் தவித்து வருகின்றனர். மேலும் டெங்கு, மலேரியா உள்ளிட்ட காய்ச்சல் பரவும் அபாயமும் உள்ளது. எனவே இப்பகுதியில் கொசுமருந்து அடித்து கொசுக்களை கட்டுப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.