பயணிகள் நிழற்குடை அமைக்க வேண்டும்

Update: 2026-02-22 18:32 GMT

ராணிப்பேட்டை காரை கூட்ரோடு பகுதியின் கிழக்கு பகுதியில் இருந்து சென்னை, காஞ்சீபுரம், ஆற்காடு ஆகிய பகுதிகளுக்கும் மற்றும் மேற்கு பகுதியில் இருந்து பெங்களூரு, சித்தூர், காட்பாடி, பொன்னை ஆகிய பகுதிகளுக்கும் ஏராளமான மக்கள் பஸ்களில் சென்று வருகின்றனர். சாலையின் இரு பக்கமும் பஸ் பயணிகள் நிழற்குடை வசதி இல்லை. பஸ்சுக்காக காத்திருக்கும் மக்கள் மழை, வெயிலில் அவதிப்பட்டு வருகின்றனர். தற்போது சுட்டெரிக்கும் வெயிலில் பயணிகள் பஸ்சுக்காக காத்திருக்கும் நிலை உள்ளது. சென்னை செல்லும் மார்க்கத்தில் தற்காலிகமாக கீற்றுக்கொட்டகையால் பயணிகள் நிழற்குடை அமைக்கப்பட்டுள்ளது. அதை மாற்றி கான்கிரீட் பயணிகள் நிழற்குடை அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-நித்தியானந்தம், காரை. 

மேலும் செய்திகள்