வெம்பாக்கம் தாலுகா தூசியை அடுத்த அப்துல்லாபுரம் கிராமத்தில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்தக் கிராமம் காஞ்சீபுரம் பாலாற்றங்கரையோரம் அமைந்துள்ளது. அந்தக் கிராமத்தில் பன்றிகள் அதிக அளவில் உள்ளன. பன்றிகளால் அப்பகுதியில் சுகாதாரச் சீர்கேடு ஏற்படுகிறது. பன்றிகள் ஊருக்குள் வருவதால் சிறுவர்கள், முதியோர் அச்சப்படுகின்றனர். கழிவுநீரில் படுத்து எழுந்து துர்நாற்றத்துடன் குடியிருப்புகளில் பன்றிகள் வலம் வருகின்றன. பன்றிகளை அப்புறப்படுத்த சுகாதாரத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஜெயராமன், வெம்பாக்கம்.