வேலூர் சத்துவாச்சாரி பகுதிகளில் ஒருபுறம் நாய்கள் தொல்லை இருந்தாலும், மற்றொரு புறம் பன்றிகள் தொல்லை அதிகரித்து வருகிறது. சத்துவாச்சாரி தண்டு மாரியம்மன் கோவில் எதிரே வேளாளர் தெருவில் ஏராளமான பன்றிகள் சுற்றித்திரிகின்றன. சாலையோரம் குவிந்து கிடக்கும் குப்பைகளை கிளறி விடுகின்றன. வாகன ஓட்டிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் சாலையின் குறுக்கே ஓடி தொல்லை கொடுக்கின்றன. மக்களுக்கு தொல்லை கொடுக்கும் பன்றிகளை பிடிக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-கோபி, வேலூர்.