ரசீது வழங்கப்படுமா?

Update: 2026-06-14 18:20 GMT

ஈரோடு ரெயில் நிலையம் பின்புறம் (பார்சல் அலுவலகம் அருகில்) இருசக்கர வாகன நிறுத்தம் அமைந்துள்ளது. இங்கு தினமும் ஏராளமான ரெயில் பயணிகள் வந்து ‌செல்கிறார்கள். பயணிகளை அழைக்க வரும் உறவினர்களின் இருசக்கர வாகனங்களை 10 நிமிடங்கள் நிறுத்தும் போது இருசக்கர வாகன நிறுத்த ஊழியர்கள் கட்டணம் வசூல் செய்கிறார்கள்‌. ஆனால் அதற்கு முறையான ரசீது கொடுப்பதில்லை. இதனால் பயணிகளை அழைத்து செல்பவர்கள் ரசீது கேட்டு மிகவும் சிரமப்படுகிறார்கள். எனவே ரெயில் பயணிகளின் நலன் கருதி 10 நிமிடம் நிறுத்தினாலும் அவர்களுக்கு ரசீது வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்