‘தினத்தந்தி’க்கு பாராட்டு

Update: 2026-06-14 18:24 GMT

மொடக்குறிச்சி 46 புதூர் கிராமம் அருகே உள்ள 19 ரோடு நொச்சிப்பாளையம் பகுதியில் குடிநீர் குழாய்க்காக தோண்டப்பட்ட குழி சரியாக மூடப்படாமல் உள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் குழிக்குள் தவறி விழுந்துவிட வாய்ப்புள்ளது. எனவே அந்த குழியை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற செய்தி ‘தினத்தந்தி’ புகார் பெட்டி பகுதியில் வெளியானது. இதைத்தொடர்ந்து அந்த குழி மூடப்பட்டுள்ளது. செய்தி வெளியிட்டு உதவிய ‘தினத்தந்தி’-க்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் பொதுமக்கள் சார்பில் நன்றியையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்