நாகர்கோவில் செட்டிகுளம் சந்திப்பில் இருந்து இந்துகல்லூரிக்கு செல்லும் சாலையில் உள்ளது. இந்த சாலையில் சித்திரைராஜபுரம் சந்திப்பில் பகுதியில் சாலையோரத்தில் கழிவுநீர் வடியால் ஓடை அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஓடையை முறையாக பராமரிக்காததால் மரக்கன்றுகள் வளர்ந்து புதர்போல காணப்படுகிறது. இதனால், கழிவுநீர் வடிந்தோட வழியின்றி தேங்கி நிற்பதால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசி சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருவதுடன், கொசுக்கள் உற்பத்தியாக தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, ஓடையை ஆக்கிரத்துள்ள மரக்கன்றுகளை வெட்டி அகற்றுவதுடன் ஓடையை தூர்வாரி கழிவுநீர் வடிந்தோட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-குமரேசன், நாகர்கோவில்.