மதுரை மாவட்டம் நாகமலைப்புதுக்கோட்டை என்.ஜி.ஓ. காலனி, தேனி-மதுரை நெடுஞ்சாலை பகுதியில் வாகன ஓட்டிகள் இருச்சக்கர வாகனங்களை அதிவேகத்தில் இயக்கி செல்கின்றனர். இதனால் அப்பகுதியில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் சாலையை கடக்க மிகவும் அச்சமடைகின்றனர். மேலும் இதனால் விபத்து ஏற்படும் அபாயம் அதிகளவில் உள்ளதால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட சாலையில் அதிவேகத்தில் செல்லும் வாகன ஓட்டிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.