திருப்பூர் மாநகர் பகுதியில் நாளுக்குநாள் தெருநாய்கள் தொல்லை அதிகரித்து வருகிறது. இந்த நாய்கள், காலை நேரத்தில் நடைபயிற்சி செல்பவர்கள் விரட்டுகிறது. குறிப்பாக குழந்தைகள் மற்றும் பெண்களை துரத்தி துரத்தி கடிக்கிறது. இதேபோல் இருசக்கர வாகன ஓட்டிகளை விரட்டுகிறது. இதனால் அவர்கள் நிலை தடுமாறி கீேழ விழுந்து விடுகிறார்கள். எனவே பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் சுற்றித்திரியும் நாய்களை பிடித்து அப்புறப்படுத்த மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
காவியா, திருப்பூர்.