உடுமலை நகராட்சிக்கு உட்பட்ட ராமசாமி நகர் அருகே கிரீன் பார்க் லே-அவுட் உள்ளது. இந்தப் பகுதியை அடையாளப்படுத்தும் விதமாக கடந்த சில வருடங்களுக்கு முன்பு நுழைவு வாயில் கட்டப்பட்டது. ஆனால் அது முறையாக பராமரிக்கப்படாமல் சேதமடைந்து உள்ளது. அத்துடன் கான்கிரீட் காரைகளும் பெயர்ந்து கீழே விழுந்து வருகிறது. இதனால் நுழைவு வாயிலை கடந்து குடியிருப்புக்கு செல்லும் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.பொதுமக்களின் பாதுகாப்பில் காட்டப்படும் சிறு அலட்சியம் கூட பேராபத்தை விளைவித்து விடும்.எனவே சேதம் அடைந்துள்ள நுழைவு வாயிலை இடித்து அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கிருஷ்ணன், உடுமலை.