கோவில் கோபுரத்தில் வளரும் அரசமரம்

Update: 2025-11-23 10:10 GMT

கரூர் மாவட்டம் நங்கவரத்தில் பிரசித்தி பெற்ற சாத்தாயி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு சுற்றுவட்டாரத்தை சேர்ந்த பொதுமக்கள் வந்து வழிபட்டு செல்கின்றனர். இந்நிலையில் இக்கோவிலின் கோபுரத்தில் அரசமரம் ஒன்று வளர்ந்து வருகிறது. இதனால் கோபுரத்தில் வேர்கள் சென்று விரிசல் ஏற்படும் நிலை உள்ளது. மேலும் இது பெரிய அளவில் வளர்ந்தால், கோபுரம் முற்றிலும் சேதமடையும் நிலை உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த அரசமரத்தை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்