சேலம் சுகவனேசுவரர் கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கிறார்கள். இதில் சிலர் இருசக்கர வாகனங்களில் வருகிறார்கள். இந்தநிலையில் இருசக்கர வாகனங்களுக்கு கட்டாய கட்டணம் வசூல் செய்கின்றனர். இதனால் பக்தர்கள் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகிறார்கள். இதுகுறித்து பலமுறை புகார் அளித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கட்டாய கட்டண வசூலை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-வேலாயுதம், சேலம்.