கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியில் பஸ் நிலையம் எதிரில் ஓசூர் செல்லும் சர்வீஸ் சாலை உள்ளது. இந்த சாலையோரத்தில் மீன் கடைகள் இரவு நேரத்தில் செயல்பட்டு வருகின்றன. இந்த கடைகளில் மீன் வறுவல்களுக்கு தூவப்படும் மசாலா பொடிகள், கார பொடிகள் காற்றில் பறந்து வாகன ஓட்டிகளின் கண்களில் பட்டு மிகவும் அவதிக்குள்ளாகிறார்கள். இரவு நேரங்களில் திறந்த வெளியில் தூவப்படும் கார பொடிகளால் வாகன ஓட்டிகள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகிறார்கள். ஆகவே உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சூளகிரியில் இரவு நேரங்களில் செயல்படும் சாலையோர மீன் கடைகளை கண்காணித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-மகேஷ், சூளகிரி.