சுகாதார சீர்கேடு

Update: 2025-10-26 12:04 GMT

பந்தலூர் தாலுகாவிற்கு உட்பட்ட உப்பட்டி பஜாரில் பொது கழிப்பிடம் ஒன்று உள்ளது. இந்த கழிப்பிடம் முறையாக பராமரிக்கப்படுவது இல்லை. இதனால் அங்கு கடும் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு உள்ளது. அத்துடன் கொசுத்தொல்லையும் அதிகளவில் உள்ளது. இதனால் அந்த கழிப்பிடத்தை பயன்படுத்தும் பொதுமக்களுக்கு ெதாற்று நோய் பரவும் அபாயம் காணப்படுகிறது. இதனால் அந்த கழிப்பிடத்தை பயன்படுத்துவதை பொதுமக்கள் தவிர்த்து வருகிறார்கள். எனவே அந்த கழிப்பிடத்தை முறையாக பராமரிக்க நெல்லியாளம் நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்