கால்நடைகளால் தொந்தரவு

Update: 2025-10-12 12:25 GMT

கிருஷ்ணகிரி தாலுகா அலுவலகத்தில் வட்டார வளர்ச்சி அலுவலகம், தீயணைப்பு துறை அலுவலகம் உள்பட பல்வேறு அலுவலகங்கள் இயங்கி வருகின்றன. இங்கு வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்கும், தாலுகா அலுவலகத்திற்கும் தினமும் பல்வேறு காரணங்களுக்காக பொதுமக்கள் வந்து செல்கிறார்கள். இங்கு மாடுகள் தொல்லை அதிகமாக உள்ளது. குறிப்பாக சாலைகளில் ஆங்காங்கே படுத்து கொண்டும், அரசு அலுவலக நுழைவு வாயிலில் இருந்தும் தொந்தரவு செய்கின்றன. இதனால் பொதுமக்கள் அச்சமடைகிறார்கள். எனவே அரசு அலுவலக வளாகத்தில் கால்நடைகள் சுற்றுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-கார்த்திக், கிருஷ்ணகிரி.

மேலும் செய்திகள்