ஆபத்தான பெயர் பலகை

Update: 2025-10-05 17:42 GMT

நாமக்கல் மாவட்டம் மோகனூர் சாலையோரம் பெயர் பலகை உள்ளது. இந்த பலகை நாளுக்குநாள் சாய்ந்து கொண்டே வருகிறது. இந்த சாலை வழியாக ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. இதனால் அந்த வழியாக செல்லும் வாகனங்கள் மீது பெயர் பலகை விழுந்து அசம்பாவிதங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே வாகன ஓட்டிகள் நலன் கருதி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து ஆபத்தான பெயர் பலகையை அகற்றி வேறு இடத்தில் வைக்க வேண்டும்.

-மணிகண்டன், நாமக்கல்.

மேலும் செய்திகள்