ஓசூரில் நகரின் மையப்பகுதியில் பஸ் நிலையம் உள்ளது. நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான மக்கள் இங்கு வந்து செல்கிறார்கள். இந்த பஸ் நிலையத்தில் ஆண் பயணிகளுக்காக இயற்கை உபாதைகள் கழிப்பதற்காக சுகாதார வளாகங்கள் கட்டப்பட்டுள்ளன. இவை முறையாக பராமரிக்கப்படுவதில்லை. கடும் துர்நாற்றம் வீசுவதால் பயணிகள் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். குறிப்பாக மழைக்காலங்களில் கடும் துர்நாற்றம் வீசுவதால் அந்த பகுதியில் யாருமே நிற்க முடியாத நிலை உள்ளது. எனவே பஸ் நிலையத்தில் உள்ள சுகாதார வளாகத்தை முறையாக பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-குமார், ஓசூர்.