தடுப்பு கற்கள் மீண்டும் வேண்டும்

Update: 2025-10-05 17:16 GMT

சூளகிரி நகருக்குள் சாலையில் தடுப்பு கற்கள் வைக்கப்பட்டிருந்தன. கடந்த மாதம் முதல்-அமைச்சர் ரோடு ஷோ நிகழ்ச்சி சூளகிரியில் நடந்தது. இதனால் நகருக்குள் சாலையின் நடுவில் உள்ள தடுப்பு கற்கள் அகற்றப்பட்டன. இந்த நிலையில் ஒரு மாதமாகியும் இன்னும் அந்த தடுப்பு கற்கள் வைக்கப்படாமல் சாலையோரமாக உள்ளன. இதனால் சாலையோர கடைக்காரர்களுக்கு இடையூறாக உள்ளது. எனவே நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் அந்த தடுப்பு கற்களை மீண்டும் சாலையின் நடுவில் வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-நவீன், சூளகிரி.

மேலும் செய்திகள்