கிணற்றுக்கு தடுப்புச்சுவர் அவசியம்

Update: 2025-09-28 15:45 GMT

சேலம் மாவட்டம் ஓமலூர் தாலுகாவிற்கு உட்பட்ட தொளசம்பட்டி அருகே அமரகுந்தி சொக்கநாதர் சிவன் கோவில் உள்ளது. இந்த கோவிலானது இந்து அறநிலையத்துறைக்கு உட்பட்டது. இந்த கோவிலை ஒட்டியுள்ள நடைபாதையில் கோவிலுக்கு உட்பட்ட கிணறு ஒன்று நீர் நிரம்பி அபாய நிலையில் உள்ளது. எனவே அசம்பாவிதங்கள் ஏற்படும் முன்பு இந்த கிணற்றை ஒட்டி தடுப்புச்சுவர் அமைத்து பாதுகாப்பு வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ஸ்டாலின், ஓமலூர்.

மேலும் செய்திகள்