தம்மம்பட்டி அருகே பச்சைமலையில் 36 கிராமங்கள் உள்ளன. இந்த மலை கிராம பகுதியில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்தநிலையில் தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் சுமார் 1,500-க்கும் மேற்பட்டவர்கள் வேலை செய்து வருகிறார்கள். இதில் பதிவு செய்ய செல்போன் கோபுரம் இல்லாததால் டவர் கிடைக்காமல் ஒவ்வொரு மலை கிராமமாக அதன் பணியாளர்கள் செல்லும் அவல நிலை ஏற்பட்டு உள்ளது. எனவே இப்பகுதியில் அரசு செல்போன் கோபுரம் அமைக்க நடவடிக்கை எடுப்பார்களா?
-தருண், தம்மம்பட்டி.