தெருநாய்கள் தொல்லை

Update: 2026-02-08 10:32 GMT

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை பகுதியில் கடந்த சில நாட்களாக தெருநாய்கள் தொல்லை அதிகரித்து வருகிறது. இந்த நாய்கள் விபத்தை ஏற்படுத்தும் வண்ணம் சாலையில் சுற்றித்திரிவதோடு வாகங்களுக்கு குறுக்கே பாய்ந்து செல்கிறது. மேலும் இரவு நேரங்களில் அப்பகுதியில் செல்லும் நடைபாதையினரை துரத்தி சென்று கடிக்கின்றது. எனவே மாவட்ட நிர்வாகம் விரைந்து மேற்கண்ட பகுதியில் சுற்றித்திரியும் தெருநாய்களை பிடித்து அப்புறப்படுத்த முன்வர வேண்டும்.

மேலும் செய்திகள்