அரியலூர் நகர பஸ் நிலையம் கட்டுமான பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்த பணிகளில் தற்போது சுணக்கம் ஏற்பட்டுள்ளதால், பணிகள் தாமதமாகியுள்ளது. கடந்த சில மாதங்களாக இந்த பஸ் நிலையத்தில் உள்ள கட்டிடத்தின் மேல் பகுதிக்கு பலரும் சென்று சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் பஸ் நிலைய வளாகமே குப்பைக்கூளமாக காட்சியளிக்கிறது. மேலும், பலரும் இங்கு சிறுநீர் கழிப்பது உள்ளிட்ட செயல்களில் ஈடுபடுகின்றனர். இதனால் கடும் துர்நாற்றம் வீசி வருகிறது. இதனால் இங்கு பஸ் ஏற வரும் பயணிகள் உள்ளிட்ட பொதுமக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.