அரவக்குறிச்சி நகர பகுதிகளில் குரங்குகள் தொல்லை

Update: 2026-02-08 11:36 GMT

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி நகரப் பகுதிகளில் குரங்குகள் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இவை அப்பகுதியில் உள்ள வீடுளுக்குள் புகுந்து உணவுப் பொருட்களை எடுத்துச்செல்வதுடன், அப்பகுதிகளில் வளர்க்கப்படும் வாழை, தென்னை மரங்களில் ஏறி வாழைக்காய், தேங்காய்களை பறித்து சேதப்படுத்துகின்றன. மேலும், குழந்தைகள், முதியவர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் அனைவரையும் கடிக்க பாய்கின்றன. இதனால் விவசாயிகள் உள்ளிட்ட பொதுமக்கள் மிகவும் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே குரங்குகள் தொல்லையை கட்டுப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்