புதுக்கோட்டை மாவட்டம் முக்கண்ணாமலை பட்டி ஊராட்சியில் தெருநாய்கள் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இவை பள்ளி செல்லும் குழந்தைகள் மற்றும் முதியவர்கள் உள்ளிட்ட பொதுமக்களை துரத்தி கடிக்க பாய்கின்றன. இதனால் அவர்கள் அப்பகுதியில் நடமாட மிகவும் அச்சப்படுகின்றனர். மேலும் அப்பகுதியில் செல்லும் வாகனங்களின் குறுக்கே பாய்வதால், விபத்துகள் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. எனவே தெருநாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.