தாரமங்கலம் நகராட்சி ஊர் சாவடியை ஒட்டி அரசு தொடக்கப்பள்ளி உள்ளது. இதன் அருகில் சொசைட்டிக்கு உட்பட்ட இடத்தில் குடிநீர் குழாய் பதிக்க குழி தோண்டப்பட்டுள்ளது. இந்த குழியானது மெயின் ரோட்டை ஒட்டி உள்ள வளைவு சாலையில் உள்ளதால் இரவு நேரத்தில் குழி இருப்பது தெரியவில்லை. மேலும் அருகில் சாக்கடை கால்வாயும் திறந்த நிலையில் காணப்படுகிறது. இதனால் இரவில் சாக்கடை கால்வாய் இருப்பதும் தெரியவில்லை. இந்த இடத்தில் பாதுகாப்பு தடுப்புச்சுவர் அல்லது பாதுகாப்பு வேலி அமைத்துக்கொடுக்க பொதுமக்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
-சசிமுருகன், தாரமங்கலம்.