பள்ளிபாளையம் தாஜ் நகர் பகுதியில் அரசு சார்பில் சில ஆண்டுகளுக்கு முன்பு உடற்பயிற்சி கூடம் திறக்கப்பட்டது. ஆனால் தற்போது இந்த உடற்பயிற்சி கூடம் சரியான பராமரிப்பு இல்லாமல் உபகரணங்கள் அனைத்தும் உடைந்த நிலையில் உள்ளன. மேலும் இந்த பராமரிப்பு இல்லாத உடற்பயிற்சி கூடம் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறிவிட்டது. எனவே இந்த கூடத்தை புதுப்பித்து தர வேண்டும் என அப்பகுதி இளைஞர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-அருள், பள்ளிபாளையம்.