ஓமலூர் தாலுகா கருப்பூர் பேரூராட்சிக்கு உட்பட்ட சமுத்திரம் ஏரியில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக நடைபாதை அமைக்கப்பட்டது. இந்த பாதையை இப்பகுதி பொதுமக்கள், மாணவ-மாணவிகள் பயன்படுத்தி வருகின்றனர். கடந்த 6 மாதங்களாகவே இங்குள்ள மின்விளக்குகள் எரிவதில்லை. இதுகுறித்து பலமுறை பேரூராட்சி நிர்வாகத்திடம் புகார் கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மேலும் இந்த பாதையில் மின் விளக்குகள் இல்லாததால் மதுபிரியர்களின் கூடாரமாக மாறி வருகிறது. எனவே நடைபாதையை முறையாக பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஊர்பொதுமக்கள், கருப்பூர்.