பள்ளிபாளையத்தில் அக்ரஹாரம் பஸ் நிறுத்தம் உள்ளது. இந்த பஸ் நிறுத்தத்தை வயதானவர்கள், பெண்கள், கர்ப்பிணிகள் அதிகமாக பயன்படுத்துகின்றனர். இந்தநிலையில் இந்த பஸ் நிறுத்தத்தில் ஒரு இருக்கை இல்லாமல் இருக்கிறது. எனவே பயணிகள் நலன் கருதி சம்பந்தப்பட்ட உள்ளாட்சி நிர்வாகத்தினர் கூடுதல் இருக்கைகள் அமைத்துக் கொடுக்க வேண்டும்.
-யஷ்வந்த், பள்ளிபாளையம்.