மதுபிரியர்கள் ஆக்கிரமிப்பு

Update: 2025-08-31 13:53 GMT

நாமகிரிப்பேட்டை ஒன்றியத்துக்குட்பட்ட வெள்ளக்கல்பட்டியில் 1-வது வார்டில் கடந்த 2006-ம் ஆண்டு நிழற்கூடம் கட்டப்பட்டது. இது ஒரு சில ஆண்டுகள் மட்டும்தான் பயணிகள் பயன்படுத்தி வந்தனர். பின்னர் நிழற்கூடம் மதுபிரியர்களின் கூடாரமாகவே மாறிவிட்டது. இதனால் அங்கு பிளாஸ்டிக் டம்ளர், மதுபாட்டில்கள் போன்றவை கிடப்பதால் அசுத்தமாகவே காட்சி அளிக்கிறது. இதனால் பயணிகள் யாரும் அங்கு செல்வதில்லை. எனவே பயணிகள் நலன் கருதி நிழற்கூடத்திற்கு வண்ணம் பூசி, பயணிகள் அமரும்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-செல்வா, நாமகிரிப்பேட்டை.

மேலும் செய்திகள்