ராசிபுரம் அருகே உள்ள ஆண்டகளூர் கேட்டில் ஆயிரக்கணக்கான மாணவர்கள், அரசு மற்றும் தனியார் வேலைகளுக்கு செல்வோர் காலை, மாலை நேரங்களில் கடும் வெயிலையும், மழையையும் பொருட்படுத்தாமல் பஸ்சுக்காக காத்திருக்கின்றனர். மழைக்காலங்களில் அவர்கள் ஒதுங்கி நிற்பதற்கு கூட இடம் இல்லை. எனவே சேலம்-நாமக்கல் சர்வீஸ் ரோட்டிலும், திருச்செங்கோடு ரோட்டிலும் பயணிகள் நிழற்கூடங்கள் உடனடியாக அமைக்க வேண்டும் என்று பயணிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-தங்க பாண்டியன், ஆண்டகளூர் கேட்.