சேதமடைந்த பெயர் பலகை

Update: 2025-08-31 12:43 GMT

சேலம் மரவனேரி கோர்ட்டு ரோடு 12-வது வார்டு கே.ஏ.எஸ். நகரில் தெருவின் பெயர் பலகை உள்ளது. இந்த பலகையில் உள்ள எழுத்துகள் அழிந்து காணப்படுகிறது. இதனால் அப்பகுதிக்கு புதிதாக வரும் பொதுமக்கள் மற்றும் தபால்காரர், கூரியர் நிறுவன ஊழியர்கள் தெருக்களின் பெயர் தெரியாமல் கடும் அவதிக்கு உள்ளாகிறார்கள். எனவே சேதமடைந்த பெயர் பலகையை விரைவில் சரி செய்ய அதிகாரிகள் முன்வரவேண்டும்.

-கண்ணன், மரவனேரி.

மேலும் செய்திகள்