சேலம் மாவட்டம் கெங்கவல்லி அடுத்த புனல்வாசல் கிராமத்தில் பொதுமக்கள் நலன் காக்க ஆரம்ப சுகாதார நிலையம் கட்டப்பட்டது. தற்போது இந்த சுகாதார நிலையம் கடந்த சில ஆண்டுகளாக செயல்படாமல் காட்சி பொருளாகவே காணப்படுகிறது. இதனால் அப்பகுதி மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இதுகுறித்து பலமுறை புகார் அளித்தும் இதுநாள் வரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே பொதுமக்கள் நலன் கருதி புனல்வாசல் கிராமத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலைத்தை புதுப்பித்து தரம் உயர்த்தி பயன்பாட்டுக்கு அதிகாரிகள் கொண்டு வருவார்களா?
-பாலமுருகன், கெங்கவல்லி.