பூட்டி கிடக்கும் கழிப்பிடம்

Update: 2025-08-24 12:39 GMT

தமிழக-கேரள எல்லையில் பந்தலூர் அருகே உள்ளது, தாளூர். இங்கு ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகிறார்கள். இந்த பகுதியில் பொது கழிப்பிடம் ஒன்று உள்ளது. ஆனால் நீண்ட நாட்களாக பூட்டியே கிடக்கிறது. இதனால் அங்கு வசித்து வரும் பொதுமக்கள் கடும் அவதிப்பட்டு வருகிறார்கள். மேலும் திறந்தவெளியை கழிப்பிடமாக பயன்படுத்தும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர். எனவே அங்கு பூட்டி கிடக்கும் கழிப்பிடத்தை திறக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்