கோட்டூர் அருகே பெருகவாழ்ந்தான் பகுதியில் பாம்புகாணி கிராமம் உள்ளது. பாம்புகாணி கிராமத்தில் உள்ள சாலை முறையான பராமரிப்பின்றி சேதமடைந்து உள்ளது. ஜல்லிக்கற்கள் பெயர்ந்து கரடு,முரடாக காட்சி அளிக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் அந்த வழியாக மிகுந்த சிரமத்துடன் சென்று வருகின்றனர். எனவே,சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் உள்ள சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.