கருவேல மரங்களை அகற்ற வேண்டும்

Update: 2025-08-17 17:47 GMT

பள்ளிபாளையம்-ஈரோடு நகரத்தை இணைப்பது காவிரி பாலம். இதில் பழைய பாலத்தின் அருகே சீமைக்கருவேல மரங்கள் முளைத்து சாலையை ஆக்கிரமித்துள்ளது. இதனால் இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் இடதுபுறமாக செல்ல வேண்டி உள்ளது. அந்த சமயத்தில் சீமை கருவேல மரங்களால் விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட நெடுஞ்சாலை துறையினர் நடவடிக்கை எடுத்து கருவேல மரங்களை வெட்டி அகற்ற வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

-லிங்கேஷ், பள்ளிபாளையம்.

மேலும் செய்திகள்