ராசிபுரம் எல்.ஐ.சி. அலுவலகம் அருகில் உயர் மின் கோபுரம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மின் உயர் கோபுரத்தில் கடந்த ஒரு மாதமாக மின்விளக்கு எரிவதில்லை. இந்த வழியாகத்தான் ரெயில்வே நிலையம், கோவில்கள், பள்ளிகள், நூற்றுக்கணக்கான குடியிருப்பு வீடுகளுக்கு செல்ல வேண்டும். மேலும் இரவு நேரங்களில் செல்லும் மாணவ-மாணவிகள், ரெயிலுக்கு செல்லும் பயணிகள் அச்சத்துடனே செல்கின்றனர். எனவே சம்பந்தப்பட்ட நிர்வாகத்தினர் உடனடியாக மின்விளக்கு எரிவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-கோடீஸ்வரன், ராசிபுரம்.