கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளியில் இருந்து பேரிகை செல்லும் சாலையில் இருபுறமும் முட்புதர்கள் வளர்ந்து காணப்படுகிறது. இதனால் வளைவுகளில் வரும் வாகன ஓட்டிகள் எதிரே வரும் வாகனங்கள் தெரியாமல் விபத்தில் சிக்குகின்றனர். குறிப்பாக நாச்சிகுப்பம் கிராமத்தின் அருகே உள்ள குப்தா நதியின் மேம்பால சாலை வளைவுகளில் முட்புதர்கள் சாலையை ஆக்கிரமித்துள்ளதால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. எனவே சாலையின் இருப்புறமும் முட்புதர்களை அகற்ற வேண்டும் என நெடுஞ்சாலை துறைக்கு வாகன ஓட்டிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
-முருகேசன், யானைகால்தொட்டி.