கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியில் உத்தனப்பள்ளி பிரிவு சாலையில் தேசிய நெடுஞ்சாலையையொட்டி உயர்கோபுர மின் விளக்கு உள்ளது. இந்த விளக்கு நீண்ட நாட்களாக எரியவில்லை. இதனால் அந்த பகுதியில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் விபத்துகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. எனவே பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அதிக அளவில் செல்ல கூடிய அந்த சாலையில் உயர் கோபுர மின் விளக்கு எரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஸ்ரீகாந்த், சூளகிரி.