சேந்தமங்கலம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க அலுவலகம் எதிரே அம்மா பூங்கா இயங்கி வருகிறது. அந்த பூங்கா வளாகத்தில் அப்பகுதியில் உள்ள குடியிருப்புகளில் இருந்து குப்பை கூலங்கள் கொட்டப்பட்டு வருகிறது. அதைத்தொடர்ந்து தற்போது இறைச்சிக்கடை போட்டுள்ளனர். இதனால் இறைச்சி கழிவுகளை தின்பதற்கு அப்பகுதியில் உள்ள தெருநாய்கள் சுற்றித்திரிகின்றன. இதனால் பூங்காவிற்கு பொதுமக்கள் அச்சத்துடனே வருகின்றனர். எனவே அங்கு இறைச்சி கடை போடுவதை தவிர்க்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-சத்யராஜ், சேந்தமங்கலம்.