பள்ளிபாளையத்தில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக மேம்பாலம் கட்டப்பட்டு கடந்த 2 மாதத்திற்கு முன்பு திறப்பு விழா செய்து பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது. இதில் பள்ளிபாளையத்தில் இருந்து திருச்செங்கோடு செல்பவர்கள் மட்டும்தான் மேம்பாலத்தின் மேலே செல்ல வேண்டும். மற்ற பகுதிகளுக்கு செல்பவர்கள் மேம்பாலத்திற்கு கீழே உள்ள ரோட்டைத்தான் பயன்படுத்த வேண்டும். இந்நிலையில் பாலத்திற்கு கீழே உள்ள ரோட்டில் மின்விளக்குகள் எரிவதில்லை. அதனால் இரவு நேரங்களில் இந்த ரோட்டை பயன்படுத்தும் பைக், கார், பஸ் போன்றவற்றின் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். எனவே மின்விளக்குகள் எரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ராம், பள்ளிபாளையம்.