தாரமங்கலத்தில் ஆடி பண்டிகையையொட்டி கண்ணனூர் மாரியம்மன் கோவிலுக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் வெளியூர்களில் இருந்து வந்து செல்வார்கள். இந்தநிலையில் பஸ் நிலையத்தின் கைலாசநாதர் கோவில் பூங்காவின் வளைவில் ஒரு பெரிய சாக்கடை கால்வாய்க்கு தடுப்புகள் இல்லை. இதனால் வாகன ஓட்டிகள் விபத்துகளில் சிக்கும் அபாயம் உள்ளது. இந்த இடத்தில் போதுமான மின்விளக்குகளும் இல்லை. எனவே பாதுகாப்பு வேலி அவசியம் அமைக்க தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-சசிகுமார், தாரமங்கலம்.