தெருநாய்கள் தொல்லை

Update: 2025-07-27 18:25 GMT

நாமகிரிப்பேட்டை அருகே உள்ள வடுகம், புதுப்பட்டி ஆகிய பகுதிகளில் ஏராளமான தெருநாய்கள் சுற்றித்திரிகின்றன. தெருநாய்கள் அந்த வழியாக செல்பவர்களை துரத்தி துரத்தி கடிக்கின்றன. மேலும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி காயம் அடைகின்றனர். இந்த மாதத்தில் மட்டும் பள்ளி குழந்தைகள் உள்பட 21 பேர் தெருநாய்கள் கடியால் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து தெருநாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

-செல்வா, நாமகிரிப்பேட்டை.

மேலும் செய்திகள்