‘தினத்தந்தி’ செய்தி எதிரொலி உடைந்து தொங்கிய தெருவிளக்கு அகற்றம்

Update: 2025-07-27 17:20 GMT

பி.என்.புதூர் அருகே மருதமலை சாலையில் தெருவிளக்கு ஒன்று உடைந்து தொங்கியது. எப்போது வேண்டுமானாலும் கீழே விழும் அபாயம் இருந்ததால், அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அச்சத்தில் இருந்தனர். இதனால் தெருவிளக்கை அகற்றிவிட்டு புதிதாக அமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இது தொடர்பாக கடந்த 21-ந் தேதி ‘தினத்தந்தி’ நாளிதழில் புகார் பெட்டியில் செய்தி வெளியானது. தற்போது அந்த தெருவிளக்கு அகற்றப்பட்டு உள்ளது. இதற்கு காரணமான ‘தினத்தந்தி’க்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் நன்றி.

மேலும் செய்திகள்