பந்தலூர் தாலுகாவிற்கு உட்பட்ட பொன்னானி கிராமத்தில் தெருவிளக்குகள் அமைக்கப்பட்டு உள்ளன. ஆனால் அவை பழுதடைந்து ஒளிராமல் கிடக்கின்றன. இதனால் இரவில் அந்த பகுதியே இருளில் மூழ்கி கிடக்கிறது. இதன் காரணமாக காட்டுயானைகள் உள்ளிட்ட வனவிலங்குகள் ஊருக்குள் புகும் அபாயம் நிலவுகிறது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் அவசர தேவைக்கு கூட இரவில் வீடுகளை விட்டு வெளியே வர அச்சப்படுகிறார்கள். எனவே பழுது நீக்கி தெருவிளக்குகளை மீண்டும் ஒளிர வைக்க அதிகாரிகள் முன்வர வேண்டும்.