கோவையை அடுத்த பி.என்.புதூர் அருகே மருதமலை சாலையில் தெருவிளக்கு உடைந்து தொங்குகிறது. அந்த தெருவிளக்கு எப்போது வேண்டுமானாலும் சாலையில் விழும் அபாயம் உள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அச்சத்தில் உள்ளனர். எனவே அசம்பாவித சம்பவங்கள் ஏதும் நடைபெறும் முன்பு அந்த தெருவிளக்கை உடனடியாக சீரமைக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.