தெருக்களில் சுற்றித்திரியும் மனநிலை பாதிக்கப்பட்டவர்கள்

Update: 2025-07-13 17:38 GMT

பர்கூர் பஸ் நிலையம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் மனநிலை பாதிக்கப்பட்ட நபர்கள் சுற்றித்திரிகிறார்கள். இவர்கள் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்கள்? என்பது தெரியவில்லை. கடந்த இரண்டு, மூன்று ஆண்டுகளாக பர்கூரில் இவர்கள் முக்கிய தெருக்களில் சுற்றித்திரிகிறார்கள். இவர்களுக்கு அவ்வப்போது பொதுமக்கள் உணவு வழங்குகிறார்கள். மேலும் அவர்கள் சாலையோரங்களில் படுத்து தூங்குகிறார்கள். சில சமயங்களில் அவர்கள் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் நடந்து கொள்கிறார்கள். எனவே இவர்களை மாவட்ட மனநல மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளிக்க வேண்டும் என அந்த பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுகின்றனர்.

-பிரகாஷ் ராஜ், பர்கூர்.

மேலும் செய்திகள்